கடலைமிட்டாய் பத்தி நினனக்கும் போது எப்போவுமே என் நெனைப்புல வர ரெண்டு விஷயம் எங்க ஊரு கம்மாயும் கில்லியும் தான்...கில்லின உடனே நம்ம விஜய் நடிச்ச படமுன்னு நினைச்சிராதிகஅது தான் எங்க பக்கத்து கிரிக்கெட்னு சொல்லலாம்..
கோவில்பட்டி கம்மாய் சித்திரை மாசமும் வைகாசி மாசமும் எங்களுக்கு விளையாட்டு மைதானம் தான் (ஆமாமா மத்த எல்லா நாளும் வெள்ளம் வந்து முடுறாப்புல...)
எங்க ஏரியா(மில் தெரு) டீமுல எப்போவுமே நான், மணி, கணேசன் தான் விளையாடுவோம்.. இதுல கணேசன் தான் வழக்கமா நாங்க தோத்துட்டா காடை வாங்குவான்..அதான் இவன் இல்லாம நானும் மணியும் விளையாட மாட்டோம்..மத்த எல்லோரும் எங்களுக்கு அல்லு சில்லு தான்...
எங்க எதிர் டீம் புதுக்கிராமம் அவங்க எல்லோரும் கில்லியை தொழில் முறையா விளையாடுரவனுங்க...(அதாவது ஸ்கூலுக்கு போகாம கில்லியை முழூ நேரமா படிக்கிறவங்க) நாங்க அப்படி கிடையாது (ஒழுங்கா ஸ்கூல் போற பசங்க நாங்க மக்கா)...இருந்தாலும் அவங்க ஏரியால அவங்கள யாரும் மதிக்க மாட்டங்க ஏன்னா அவங்க ஏரியால அவங்க trainee தான்...(என்ன செய்ய அப்படி பட்டவங்க தான் நம்மளுக்கு tough டீம்)அதால அவங்க எப்போவுமே ஸ்கூல் லீவ் விட்டவுடனே எங்களை மேட்ச் விளையாட கூப்பிட ஆளு அனுப்ப அரம்பிசுருவானுங்க...
நாம்ம தான் சவாலுக்கு சவால் விடுற அளுகளாச்சே...அதாலே...எப்போவுமே ஒரு ரெண்டு வாரம் கழிச்சு மேட்ச் பிக்ஸ் பன்னுவோம்(அந்த ரெண்டு வாரம் practice பண்ண தான்...) பந்தயம் எப்போவுமே நம்ம கடலைமிட்டாய் தான். நாங்க வழக்கமா பந்தயத்துக்கு வாங்குறதை விட ஒரு ரெண்டு பாக்கெட் சேர்த்து வாங்குவோம் (கணேசன் காடை வாங்கும் போது நானும் மணியும் என்ன தான் செய்றது...) அனா நம்ம எதிர் டீம் எப்போவுமே கடலைமிட்டாய் வாங்குனதா சரித்திரமே கிடையாது அதான் அவங்க பங்குக்கும் சேர்த்து நாங்களே வாங்குறோமே (?!) ...
நான் பாட்டுக்கு காடை காடைனு சொல்றேனே அப்படின என்னனு நிறைய பேருக்கு புரியாதுனு நினைக்கிறேன்...காடைய பத்தி சொல்லுறதுக்கு முன்னாடி எங்க கில்லி மாட்ச்சோட டெர்ம்ஸ் தெரிஞ்சா உங்களுக்கும் follow பண்ண easya இருக்கும்..
அது அடுத்த போஸ்ட்ல...
Wednesday, November 5, 2008
Friday, October 31, 2008
கோவில்பட்டி கடலைமிட்டாய்
நம்ம எல்லோருக்குமே நம்ம ஊருலே கிடைக்குற விஷயத்தை அடுத்தவன் சொன்னாதான் தெரியும் அது மாதிரி இல்லாம கடலைமிட்டாய் நம்ம வாழ்க்கையில கலந்த விஷயம்...
நம்ம ஊரு பக்கம் இருந்து வெளியே போய் வேலை பார்க்குற எல்லோருமே நம்ம ஊரு பக்கம் வந்தா மறக்காம வாங்கிட்டு போற பண்டம் கடலைமிட்டாய் தான்..
கடலைமிட்டாய்கான செய்முறை ரொம்ப லேசு இந்த ஊரு பக்கம் விளையுற கடலை, வெல்லம் அப்புறமா கொஞ்சம் ஏலக்காய் (இது மட்டும் நம்ம சேட்டங்க உபயம்)..கூடவே நல்ல கனமான இரும்பு சட்டி நல்ல தணல் அடுப்பு...
கடலைய நல்ல வறுத்துட்டு வெல்லம் சேர்த்து அடி பிடிக்காம இரும்பு சட்டில சன்னமான நெருப்புல ஒரு ரெண்டு மூணு மணி நேரம் கிளறினா...கோவில்பட்டி கடலைமிட்டை தயார்...சொல்ல ரொம்ப லேசா தான் இருக்கும் மக்கா ஆனா செஞ்சா தான் கஷ்டம் தெரியும்...
கடலைமிட்டாய் பக்குவம் ரொம்ப முக்கியம்..அது இங்க குறிப்பிட்ட ஒரு நாலு அஞ்சு குடும்பத்துகிட்டதான் இருக்கு...
பெங்காலி ஸ்வீட்,கேக், மில்க் ஸ்வீட் இப்படி என்ன தான் வந்தாலும் கோவில்பட்டி கடலைமிட்டாய்ய அடிச்சுக்கிட இன்னொரு ஸ்வீட் வரவே இல்ல...
எப்பவும் நான் ஊருக்கு போறேன்னு தெரிஞ்ச உடனே எங்க ஆபீஸ்ல இருந்து ஒரு நாலு அஞ்சு பேராவது கடலைமிட்டாய் வாங்கிட்டு வர சொல்லுவாங்க... (இத்தனைக்கும் எங்க கம்பெனி ஒரு சாப்ட்வேர் கம்பெனிங்கோ...)
எத்தனை எடத்துலே சாப்பிட்டாலும் அம்மா கையாலே சாப்பிட்ட மாதிரி வருமா..
அது மாதிரிதான் எந்த கடலைமிட்டாய்...
எளிமை தான் மக்க நம்ம ஊரு பெருமை...
கடலைமிட்டாய் பத்தி நம்ம சின்ன வயசு அனுபவம் தான் அடுத்த போஸ்ட்...

Thursday, October 30, 2008
வணக்கம் மக்கா
வணக்கம் மக்கா
நானும் ரொம்ப நாள்ள பார்க்குறேன் எல்லா எடத்துலேயும்
மதுரைய பத்தி எழுதுறாங்க...
சென்னைய பத்தி எழுதுறாங்க...
நெல்லைய பத்தி எழுதுறாங்க...
கோவில்பட்டிய பத்தி மட்டும் காணும்....
அது சரி கோவில்பட்டி காரங்க தான் கடமைய கண்ணா கருதுரவங்கலாச்சே...
அதான் இந்த blog...
இனிமே நாங்களும் எங்க ஊரை பத்தி எழுதுவோமுலே....
எங்க ஊரு ரொம்ப நல்ல ஊரு டோய்...
Subscribe to:
Posts (Atom)